Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!…. நாட்டில் ஊரடங்கு தேவையா?…. மருத்துவர் கொடுத்த விளக்கம்…..!!!!!

இந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரத்தால் சர்வதேச விமானங்களை தடைசெய்யவோ (அ) ஊரடங்கு விதிக்கவோ தேவையில்லை. எனினும் சில நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருதி பலப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு தேவை என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில் இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், புதியதாக கொரோனா அலை மற்றும் தொற்று பாதித்தோர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது சாத்தியமில்லை என்றும் நிபுணர்கள் கூறினர்.

இதுகுறித்து எய்ம்ஸின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது “ஒட்டு மொத்தமாக இந்தியாவில் திடீரென்று கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை இல்லை. சீனாவில் கண்டறியப்பட்டு உள்ள ஒமிக்ரான் துணை மாறுபாடு பிஎப்.7, ஏற்கனவே நமது நாட்டில் கண்டறியப்பட்டு இருக்கிறது என தரவு தெரிவிக்கிறது” என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து வர இருக்கும் நாட்களில் ஊரடங்கு தேவையா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டாக்டர் ரந்தீப் குலேரியா கூறியதாவது, தற்போதைய சூழ்நிலை மற்றும் மக்கள் தொகையில் நல்ல அளவிலான கலப்பின நோய் எதிர்ப்பு சக்தியை கருத்தில் கொண்டு ஊரடங்கு தேவையில்லை என்று கூறினார்.

Categories

Tech |