Categories
உலக செய்திகள்

கொரோனா இறப்பு விகிதம்… ஏழாவது இடத்தில் பிரான்ஸ்… மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர்…

பிரான்ஸ் மக்கள் அனைவரும் தவறான பாதையில் செல்வதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்சில் கொரோனாவின் பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பொது மக்களை எச்சரித்துள்ள பிரதமர், நாடு கடந்த இரண்டு வாரங்களாக தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார். கடந்த 2 நாட்களில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,397 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் ஐயாயிரத்துக்கும் மேலானவர்கள் கூடும் கூட்டங்களுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தை மேலும் நீடிக்குமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பொது போக்குவரத்து, கடைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாடு முழுவதும் முக கவசம் அணிய வேண்டும் என்பது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள விதிமுறையாகும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொரோனாவின் பாதிப்பை பிரான்ஸ் அதிகமாக அனுபவித்ததால் 30,000க்கும் மேற்பட்டோரை இழந்திருக்கிறது. சென்ற திங்கட்கிழமையில் இருந்து தற்போது வரை 14 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் கொரோனாவால் 1,00,000 மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதனால் உலகின் கொரோனா இறப்பு விகிதம் பட்டியலில் பிரான்ஸ் ஏழாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |