அரியலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ‘கொரோனா கால கதாநாயகர்’ என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி ஒன்று 9 ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்றது. இதனையடுத்து கட்டுரைப் போட்டியை 13 பள்ளிகள் இணைந்து இந்த அரசு மேல்நிலைப்பள்ளியை மையமாகக் கொண்டு நடத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த கட்டுரை போட்டியில் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அறிவழகன், ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து இந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி பரிசுகளை வழங்கினார். இந்தப்போட்டியில் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் அமிர்தா என்ற மாணவி முதல் பரிசை பெற்றார். இதனையடுத்து அதே வகுப்பில் படிக்கும் விஜயகுமாரி இரண்டாம் பரிசையும் மற்றும் குணமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கவிபாரதி மூன்றாம் பரிசையும் பெற்றனர். மேலும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி அலுவலர் ராசாத்தி முதல் பரிசு பெற்றவருக்கு தொடுதிரை கணினி, இரண்டாம் பரிசு பெற்ற மாணவிக்கு செல்போன், மூன்றாம் பரிசு பெற்ற மாணவிக்கு சயின்டிபிக் கால்குலேட்டர் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.