நேபாளத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய தளர்வுகளை அறிவித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதிலும் பலகட்டுபாடுகள் விதிக்கப்பட்டு குறிப்பாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதையெடுத்து நேபாளத்தில்கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சுற்றுலா தளங்களில் பயணிகளை அனுமதிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால்மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் .
அதுமட்டுமல்லாமல் நேபாளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன்னரே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம் என்ற பரிசோதனைச் சான்றிதழை தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் நேபாள நாட்டிற்கு வந்த பிறகு சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த செலவில் மீண்டும் கொரோனா பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது.