பிரேசிலில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை நாள் ஓன்றுக்கு 3000 ஐ கடந்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருப்பது பிரேசில் தான். மேலும் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா இந்தியா அதன்பின் மூன்றாவதாக பிரேசில் தான் உள்ளது. இங்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக நாளொன்றுக்கு பிரேசிலில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000 கடந்துள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 4 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3001 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதன்படியும் மொத்த பலி எண்ணிக்கையானது 401186 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 69359 இதன் மூலம் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14590678 ஆக அதிகரித்துள்ளது.