Categories
உலக செய்திகள்

தொடர்ந்து 2வது இடத்தில நீடிக்கிறது…. குழந்தைகளை பாதிக்கும் கொரோனா…. பிரேசில் சுகாதாரத்துறை தகவல்….!!

கொரோனாவால் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர் அதிகம் பாதிக்கப்படுவதாக பிரேசில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேஸிலும் உண்டு. இந்த நாடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 80,529 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,75,893 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 3774 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரேசிலில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். சுமார் 1300 பச்சிளம் குழந்தைகள் மற்றும் 9 வயதிற்கு உட்பட்ட 800க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |