இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதால் சற்று ஆறுதல் அளித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில், ” இந்தியாவில் தற்போது வரை 29,75,702 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69,878 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 945 பேர் உயிரிழந்ததால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 55,794 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து தற்போது வரை 22,22,578 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட 6,97,330 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.