மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அவர் கூறியதாவது “உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து உள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்கு நாம் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவவேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளில் உள்ள மக்கள் கொரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று பிரதமர் உரையாற்றினார்.