Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து மீண்ட பிரேசில் அதிபரின் மனைவி…!!!

பிரேசில் அதிபரின் மனைவி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இருந்தாலும் அந்நாட்டின் அதிபர் ஜெயில் போல்சனாரோ முழுமையான ஊரடங்கும் மற்றும் முகக்கவசம் அணியும் போன்ற கட்டுப்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்தார். அதனால் கடந்த மாதம் ஏழாம் தேதி அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் 20 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 27ஆம் தேதியன்று கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து உள்ளார் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

அதன்பின்னர் சில நாட்கள் கழித்து அவரின் மனைவி மிச்செல் போல்சனாரோவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் தன்னைதானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வந்து விட்டதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ” கொரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. உங்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |