Categories
உலக செய்திகள்

#StayStrongIndia…. மின்விளக்குகளை ஒளிரச் செய்த அபுதாபி…. தங்களது ஆதரவை தந்த ஐக்கிய அரபு அமீரகம்….!!

கொரோனாவின் இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் நெகிழ்ச்சியூட்டும் வகையில் மின்விளக்குகளை ஒளிரச் செய்தது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. மேலும் நோய்த்தொற்ரை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியாவும் போராடி வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் இந்திய மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையும் அளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் ஒரு நெகிழ்ச்சி செயலை செய்திருக்கிறது.

அது என்னவென்றால் அபுதாபியில் இருக்கும் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா இந்திய நாட்டு தேசியக்கொடியின் படத்தை ஒளிரச் செய்து அதில் #StayStrongIndia என்ற நம்பிக்கையான சொற்களுடன் ஒளிர செய்துள்ளது. அதேபோல் அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி, கலிஃபா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கட்டிடங்களிலும் இந்திய நாட்டுக் கொடியை ஒளிரச் செய்து இந்திய மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளது.

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் இந்திய மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான உயிர்கள் தினமும் பலியாகின்றனர். இதனால் இந்தியாவுக்கு ஆதரவாக உலகின் பல நாடுகள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை வழங்கி உதவி செய்து வருகின்றது. அதில் சவுதி அரேபியாவும் 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |