மருத்துவமனை ஊழியர்களுக்குப் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாங்கனாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர்கள் திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாங்கனாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.
இதேபோல் எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்துவரும் செவிலியர் ஒருவருக்கு திடீரென கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அந்த ஆரம்ப சுகாதார நிலையமும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு ஆரம்ப சுகாதார நிலையமும் அதன் சுற்று வட்டார பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் இந்த இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களும் மூடப்பட்டதால் தினந்தோறும் அதற்கு வந்து சிகிச்சை பெரும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.