கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தொட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இதில் 48 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சென்னையில் புதிதாக 3,711 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 10 13 378 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 920369 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.