கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சாத்தான்குளத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகதின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாத்தான்குளத்தில் தடுப்பூசி முகாமில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
அந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு தொகுதி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அண்டனி மைக்கேல் தலைமை தாங்கி பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது ஒன்றிய ஆணையர் பாண்டியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் போன்றோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், மாசானம், பட்டாத்தி உள்ளிட்ட ஊராட்சி தலைவர்கள், செயலர்கள், சத்துணவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.