கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத சினிமா தியேட்டர் மற்றும் நகை கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோவன், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், நாகராஜன், ரமன சரண் போன்றோர் தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத ஒரு சினிமா தியேட்டர் உரிமையாளருக்கு அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோன்று 2 நகை கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.