Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி கருத்துகணிப்பு… மக்களின் கருத்து என்ன தெரியுமா?…!!!

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்வதில் உலக அளவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் விரும்பவில்லை என தெரியவந்துள்ளது.

உலக அளவில் கொரோனா தடுப்பூசி குறித்த கருத்துகணிப்பு கடந்த ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அந்தக் கருத்துக் கணிப்பை ஜெனிவாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மற்றும் இப்சோஸ் என்ற சந்தை ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்தியது. அதில் அமெரிக்கா மற்றும் இத்தாலி உட்பட்ட 27 நாடுகளில் உள்ள மொத்தம் 20,000 மக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்த கருத்து கேட்கப்பட்டது. அதில் 74 சதவீத மக்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்தால் உடனடியாக போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும் 26 சதவீதம் மக்கள் கோரோணா தடுப்பூசி கிடைத்தாலும் அதனை தாங்கள் போட்டுக் கொள்ள விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்பட்டு விடுமோ அல்லது அதன் செயல்திறன் எப்படி இருக்குமோ என்ற அச்சமே இதற்கு காரணமாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 13 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இந்த கருத்தை கூறியுள்ளனர். உலக அளவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆண்டுக்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வராது என்று கூறியுள்ளனர். இருந்தாலும் சீனா, சவுதி அரேபியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் அதிகமானோர் இந்த வருடமே தடுப்பூசி கிடைத்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களிடையே தடுப்பூசியை நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கு அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் வேண்டும் என உலக பொருளாதார கூட்டமைப்பைச் சார்ந்த அர்னாட் பெர்னார்ட் தனது கருத்தை கூறியுள்ளார்.

Categories

Tech |