கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 6 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி முகாம் 6 இடங்களில் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு பூதப்பாண்டி, குழித்துறை, பத்மநாபபுரம் போன்ற அரசு மருத்துவமனைகள், நாகர்கோவிலில் குருசடி புனித அந்தோணி மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி போன்றவற்றில் கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படுகின்றது என்று கலெக்டர் அரவிந்த தெரிவித்துள்ளார். இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்காக பொதுமக்கள் நேரடியாக வருகின்றனர்.
இதேபோன்று கோவேக்சின் 2-வது டோஸ் வெளிநாடு செல்பவர்கான தடுப்பூசி முகாம் குழித்துறை மற்றும் நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரடியாக டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரத்து 670 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு, தற்போது 230 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்பின் மாவட்டம் முழுவதிலும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்த 113 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 97 ஆயிரத்து 655 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.