கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாளை 102 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது.
தமிழகம் முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துவதற்கு முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் அரசு மருத்துவமனை, நகரசபை அலுவலகம், புனித ஓம் பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் சமுதாயக்கூடம், ஸ்ரீராம் நகர் நகர் நல மையம் உட்பட 33 மையங்கள் மற்றும் கிராமபகுதிகளில் 69 மையத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருப்பதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இதற்கான ஏற்பாடுகளை நகர சபை ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா போன்றோர் செய்து வருகின்றனர். இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்துபவர்களில் 100 பேரை தேர்ந்தெடுத்து குலுக்கல் முறையில் 3 பேருக்கு தங்ககாசு, 5 பேருக்கு வயர்லெஸ் ஹெட்போன், 50 பேருக்கு சேலை, 30 பேருக்கு ஹாட் பாக்ஸ், 20 பேருக்கு டி.சர்ட் பரிசு போன்றவை வழங்கப்பட இருக்கின்றது. எனவே முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவர் உமா செல்வி, சுகாதார ஆய்வாளர் இளங்கோ, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, சுகாதார ஆய்வாளர் சுரேஸ் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.