கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், மின்வாரிய அலுவலகம், மூன்றாம் தெரு சுந்தரம் சுப்ர மகால், இடையர் எம்பேத்தி அரசுப்பள்ளி, இடையர் நத்தம் அரசுப்பள்ளி, காரிகோட்டை அரசுப்பள்ளி, 54- நெம்மேலி அரசு பள்ளி ஆகிய 9 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த முகாம்களில் காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.