கொரோனாவிற்கு எதிரான பைஸர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து பைசர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்கனவே பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், WHO ஒப்புதலால் தடுப்பூசி பல நாடுகளுக்கு விரைவாக சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.