Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றினால்… இணைபிரியாத தம்பதி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கொரோனா தொற்றினால் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏ.கே.எஸ். தியேட்டர் பகுதியில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளரான முதியவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 73 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியையான மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வாளர் மற்றும் ஆசிரியை இணைந்து மதுரையில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளனர். அப்போது கணவன் மனைவி ஆகிய 2 பேருக்கும் உடல் வலி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் 2 பேரும் அரசு மருத்துவமனைக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கணவர் மற்றும் மனைவி ஆகிய 2 பேருக்கு வீட்டிலே சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த சுகாதார ஆய்வாளரின் மகன் வெளியூரிலிருந்து தனது குடும்பத்துடன் தந்தை மற்றும் தாயை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சென்றபோது ஆய்வாளரின் மகன் மற்றும் பேரன், பேத்தி ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சுகாதார ஆய்வாளரின் உடல்நிலை மிகவும் மோசமானதால்  அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவர் இறந்த சிறிது நேரத்திலேயே ஆசிரியையும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று கணவன் மற்றும் மனைவியின் உடலை கைப்பற்றி கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி மயானத்தில் அவர்களின் உடல்களை அடக்கம் செய்துவிட்டனர்.

Categories

Tech |