Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று பரவல்… ஒரே நாளில் 4 பேர் பலி… தென்காசி மாவட்டத்தின் நிலவரம்…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அங்கு ஒரே நாளில் 456 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 16, 416 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல்அங்கு தற்போது வரை  241 பேர் கொரோனா தொற்றினால்  உயிரிழந்து விட்டனர்.

மேலும் 13, 414 பேர் கொரோனா தொற்றிற்கான சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்கு 2,761 பேர் கொரோனா தொற்றிற்கான சிகிச்சையை மருத்துவமனையில் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த 3 மூதாட்டிகள் மற்றும் 38 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

Categories

Tech |