Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 16,600 டோஸ் வந்துருக்கு…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 16,600 தடுப்பூசிகள் வந்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாவட்டத்தில் இதுவரையிலும் 3 லட்சத்து 44 ஆயிரத்து 153 நபர்களுக்கு முதல் டோஸ் மற்றும் 70 ஆயிரத்து 16 நபர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசிகள் என 4 லட்சத்து 14 ஆயிரம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இந்த மாவட்டத்தில் முகாம்கள் நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த மாவட்டத்திற்கு 1,600 கோவேக்சின் மற்றும் 15 ஆயிரம் கோவிஷில்டு தடுப்பூசிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 600 மருந்துகள் வந்துள்ளது. அந்த தடுப்பூசிகள் தற்போது சுகாதார துறையினர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருக்கின்றது. இவ்வாறு தடுப்பூசி மருந்துகள் வந்ததையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முகாம்கள் நடைபெறும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |