கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 233 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாலியர் மகாஜன பரிபாலன சபை அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் முதல் தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில் மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன், நகர் நல மருத்துவர் கோமதி போன்றோர் மேற்பார்வை மற்றும் ஆலோசனையின்படி செவிலியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி, அய்யப்பன், சரத்பாபு, முத்துக்காமாட்சி, சரவணன் போன்றோர் செய்திருந்தனர். இங்கு 233 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.