Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” 2 தவணை தடுப்பூசி…. உலகளவில் 330 கோடி மக்கள்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் இதுவரையிலும் 330 கோடி நபர்களுக்கு 2 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு 2 தவணையாக வழங்கப்படும் இந்த தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இதுவரை 330 கோடி நபர்கள் செலுத்திக் கொண்டிருப்பதாகவும், இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 42.2 சதவீதம் என தினசரி கொரோனா அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 4.7 கோடி நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி அமெரிக்காவில் 7.88 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.48 கோடி நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்தியாவில் 4.9 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்து உள்ளனர். இதனிடையில் உலகம் முழுவதும் கடந்த 23-ம் தேதி நிலவரப்படி 774 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பெரும்பாலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது சீனா-241.9 கோடி,  இந்தியா- 118.45 கோடி, ஐரோப்பா ஒன்றியம்- 73 கோடி, அமெரிக்கா 42.28 கோடி, பிரேசில் 24.07 கோடி போன்றவை அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் ஆகும்.

 

Categories

Tech |