கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 9 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 11 இடங்களில் நிரந்தர தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே மாவட்டம் முழுவதிலும் இதுவரை 3 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்திற்கு கடந்த 11-ம் தேதி 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. அதில் சுமார் 2 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் இருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து இந்த மாவட்டத்திற்கு 5 ஆயிரம் கோவிஷில்டு, 4 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்தது. அவை தடுப்பூசி முகாம்கள், சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.