வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 17,280 தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனை, ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் என பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து 2 கட்டங்களாக 16 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் மாவட்டத்திற்கு வந்தது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு மேலும் 1,280 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. அதன்பின் அரசு மருத்துவமனை, ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.