Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 65 இடங்களில் முகாம்…. கலெக்டரின் தகவல்….!!

கன்னியாகுமரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 13 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்ததை அடுத்து இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இதில் முதன் முதலில் தெரிவிக்கப்பட்ட 14 இடங்களில் தடுப்பூசி ஆன்லைன் பதிவு செய்வதன் மூலமாக அனுமதிக்கப்படும். அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் துறை, குருந்தங்கோடு, கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குட்டக்குழி, கோதனல்லூர் போன்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், குழித்துறை அரசு மருத்துவமனை, நாகர்கோவிலில் உள்ள சால்வேஷன் ஆர்மி பள்ளி, இந்துக்கல்லூரி, டதி பெண்கள் பள்ளி, கவிமணி பள்ளி போன்ற 14 இடங்களில் ஆன்லைன் பதிவு செய்வதன் மூலமாக தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. இவற்றில் குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் கவிமணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வெளிநாடு செல்பவர்களுக்கான 2-வது டோஸ் மட்டும் செலுத்தப்படுகிறது. இதனையடுத்து நேரடி டோக்கன் முறைகளில் 51 இடங்களில் வைத்து தடுப்பூசிபோடப்படுகிறது.

அதாவது பூதப்பாண்டி, செண்பகராமன்புதூர், தடிக்காரன்கோணம், அரும நல்லூர், ஆரல்வாய்மொழி, தோவாளை, அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கொட்டாரம், மருங்கூர், ராஜகமங்கலம் துறை, சிங்களேயர்புரி, கணபதிபுரம், குருந்தங்கோடு, சேனம் விளை, வெளிச்சந்தை, நடுவூர்கரை, முட்டம், குளச்சல், கிள்ளியூர், கீழ்குளம், நட்டாலம், உண்ணாமலைக்கடை, குழித்துறை, தூத்தூர், முன்சிறை, தேங்காப்பட்டணம், ஆறுசேதம், கொல்லங்கோடு, இடைக்காடு, பத்துகாணி, மேல்புறம், களியக்காவிளை, பளுகள், குட்டக்குழி, கண்ணனூர், திருவட்டார், பேச்சிப்பாறை, சுருளோடு, கோதநல்லூர், திருவிதாங்கோடு, பள்ளியாடி, ஓலவிளை, பத்மநாபபுரம் போன்ற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரடி டோக்கன் முறையில் செலுத்தப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி, குளச்சல், கருங்கல், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் போன்ற அரசு மருத்துவமனையிலும், நாகர்கோவில் தம்மத்துகோணம் அரசு நடுநிலைப் பள்ளி போன்ற இடங்களில் நேரடி டோக்கன் மூலமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த நேரடி டோக்கன் முறைகளில் பொதுமக்கள் மற்றும் நீரிழிவு நோய், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் என அனைவருக்கும் தனித்தனியாக தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலுத்தப்படுகின்றது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |