கொரோன தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 926 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக வெம்பக்கோட்டை துணை சுகாதார நிலையம், மேலஒட்டம் பட்டி, கோட்டைப்பட்டி, இ.ராமநாதபுரம், விஜயகரிசல்குளம், கணஞ்சாம்பட்டி போன்ற பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 926 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அப்போது தாயில்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தட்டி காளை, சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் போன்றோர் முகாமில் கலந்து கொண்டனர்.