Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” 5, 000 டோஸ் வந்துருக்கு…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 5,000 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக நிரந்தர தடுப்பூசி முகாம், ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் இதுவரை 3 1/2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு கடந்த 17ஆம் தேதி 14 ஆயிரம்  தடுப்பூசி மருந்துகள் வந்த நிலையில் குறைந்த அளவு தடுப்பூசிகளே கையிருப்பில் காணப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு 5 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. இதனையடுத்து அவை நிரந்தர தடுப்பூசி முகாம்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. எனவே சிறப்பு முகாம்கள் மற்றும் நிரந்தர தடுப்பூசி முகாம்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |