கொரோனா பரவல் காரணமாக 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் தவிக்கின்றனர் என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்னும் போராடிக் கொண்டு இருக்கின்றது. இந்த நேரத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பங்கேற்று பேசினார். அப்போது ஆண்டனியோ குட்டரேஸ் பேசியதாவது “கொரோனா தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தவிக்க விட்டது. இதில் 400 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமூக ஆதரவு குறைவாக உள்ளது. மேலும் சுகாதார பராமரிப்பு இல்லை.
அதுமட்டுமின்றி அவசரமாக தேவைப்படும்போது வருமான பாதுகாப்பு இல்லை. இதனையடுத்து உலகம் 5 முதல் 6 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பொருளாதார மீட்பின் மத்தியில் இருந்தாலும், வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி இருக்கின்றது. அதன்பின் வலுவான பொருளாதார நாடுகள் மீட்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீத அளவுக்கு மீட்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. எனினும் குறைவான வளர்ச்சியடைந்த நாடுகள் சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் தான் முதலீட்டுக்காக ஒதுக்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.