கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவுவதன் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் தடுப்பூசி போடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் இதுவரை இந்தியாவில் 14,78,27,367 டோஸ் தடுப்பூசி போடப் பட்டுள்ளன. இது நேற்று காலை ஏழு மணி படி நிலவரம் ஆகும். அதேபோல் இதில் முன்கள பணியாளர்களில் 1 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 975 பேர் முதல் டோஸ் மற்றும் 65 லட்சத்து 26 ஆயிரத்து 378 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர்.
மேலும் சுகாதார பணியாளர்கள் 93 லட்சத்து 47 ஆயிரத்து 775 பேர் முதல் டோஸ் மற்றும் 61 லட்சத்து 6 ஆயிரத்து 737 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 10 லட்சத்து 85 ஆயிரத்து 677 பேர் முதல் டோஸ் மற்றும் 93 லட்சத்து 37 ஆயிரத்து 292 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் எடுத்து கொண்டுள்ளனர்.
மேலும் 40 முதல் 60 வயதிற்குள் இருப்பவர்கள் 52,74,581 முதல் டோஸ் மற்றும் 29,27,452 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் எடுத்துக்கொண்டனர். இதில் பார்க்கவேண்டியது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 67.26 % பேர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 25 லட்சத்து 56 ஆயிரத்து 172 பேர் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டனர். இதில் 15 லட்சத்து 69 ஆயிரத்து ஆயிரம் பேர் முதல் டோஸ் மற்றும் 9 லட்சத்து 87 ஆயிரத்து 182 பேர் இரண்டாவது தோஷம் சேர்த்துக் கொண்டனர்.