மத்திய அரசு கேட்டுக் கொண்டதன்படி சீரம் நிறுவனம் ஒரு டோஸ் தடுப்பூசி விலையை 300 ஆகவும் பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு டோஸ் தடுப்பூசியின் விலையை 400 ஆகவும் நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா கோவிஷீல்டு என்ற பெயரிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற பெயரிலும் தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது ஒரு டோஸ் தடுப்பூசி விலையை திடீரென்று அதிகரித்துள்ளது. அதன்படி சீரம் நிறுவனமும் 400 ரூபாயாகவும் பயோடெக் நிறுவனம் 600 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.
இதனால் மத்திய அரசிடம் மாநில அரசு விலையை குறைத்து கொள்ள வேண்டி வலியுறுத்தியதை அடுத்து மத்திய அரசு இந்த இரண்டு நிறுவனங்களிடமும் விலையை குறைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சீரம் நிறுவனம் மாநிலங்களுக்கு வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை 300 ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை 600 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக குறைந்துள்ளது.