Categories
உலக செய்திகள்

12 வயதினருக்கும் போட வேண்டும்…. அனுமதி கொடுங்க…. பைசர் நிறுவனத்தின் வேண்டுகோள்….!!

12 முதல் 15 வயதினருக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி தருமாறு இரண்டு நிறுவனங்களும் ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

பயோஎன்டெக் நிறுவனமும் பன்னாட்டு மருத்துவ நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது தடுப்பூசியை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 27  நாடுகளிலும் இருக்கும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இந்த தடுப்பூசியை ஐரோப்பாவில் 12 முதல் 15 வயதினருக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என இந்த இரண்டு நிறுவனமும் ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளது.

அதேபோல் அமெரிக்காவிலும் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு தங்கள் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பினர் நிறுவனத்திடம் பைசர் நிறுவனம் ஏற்கனவே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக இந்தியாவை பொருத்தமட்டில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது இன்று தான் ஆரம்பித்துள்ளது. ஆனால் ஐரோப்பாவில் 12 வயதுடையவருக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. தற்போது பைசர் நிறுவனத்திற்கு இந்த அனுமதி கிடைத்துவிட்டால் 12 வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது இதுவே முதல் முறை ஆகும்.

Categories

Tech |