Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தினமும் 150 பேருக்கு தடுப்பூசி…. மொத்தம் 3500 பேருக்கு போடப்பட்டது…. செய்தியாளர்களிடம் தெரிவித்தார் பூதலூர் வட்டார சுகாதார அலுவலர்….!!

கொரோனா தடுப்பூசியை 3,500 பேருக்கு போடப்பட்டுள்ளதாக வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் விஜயராஜ் கூறியுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூரில் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் விஜயராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது “இதுவரை பூதலூர் வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி 3,500 பேருக்கு போடப்பட்டுள்ளது.

மேலும் தினமும் 150 பேருக்கு குறையாமல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசி போடும் பணியானது பூதலூர் வட்டாரத்தில் உள்ள மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் அரசு மருத்துவமனைகளிலும் போடப்பட்டு வருகின்றது” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |