நேற்று ஒரே நாளில் 10,330 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களை விட அதிக ஆண்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள், தனியார் மையங்கள் என மொத்தம் 117 மையங்களில் தினமும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் நேற்று முன்தினம் ஒரே நாளில் 10,587 பேரும் நேற்று 10,330 பேரும் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆரம்பகட்டத்தில் பொதுமக்கள் இடையே ஒரு சிறிய அவநம்பிக்கை இருந்தாலும் தற்போது ஆண்களும் பெண்களும் தன்னார்வத்துடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிந்து வரிசையில் வந்து நின்று தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் பார்க்கும்போது அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கின்றது.