பெண் சுகாதார ஊழியர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டே நாளில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுதிள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பைசர் நிறுவனத்தால் உறுதிசெய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி அமெரிக்கா மற்றும் போர்ச்சுக்கல் போன்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சிலருக்கு பக்க விளைவுகளும் உடல்நல கோளாறுகளும் ஏற்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் போர்ட்டோ நகர் பகுதியில் மருத்துவமனை ஒன்றில் சுகாதாரத் துறை ஊழியராக பணியாற்றி வந்தவர் தான் சோனியா அக்விடோ. இவருக்கு வயது 41 நிரம்பிய நிலையில் கடந்த 30ஆம் தேதி பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இவருக்கு போடப்பட்டிருந்தது. தடுப்பூசி போட்டுக் கொண்டு புத்தாண்டை கொண்டாட தனது தந்தை வீட்டிற்கு சோனியா சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி திடீரென அவர் உயிரிழந்தார்.
இதனை அடுத்து சோனியாவின் உடல் போர்ச்சுகல் சுகாதார துறை அதிகாரிகளால் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த உடற்கூறு ஆய்வில் தான் சோனியா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் கரணம் உள்ளதா என தெரிய வரும்