உலகில் கொரோனாவின் தாக்கம் இன்னும் 10 ஆண்டுகள் இருக்கும் என பயோடெக் தலைவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் இன்னும் 10 ஆண்டுகள் இருக்கும் என பைசர் நிறுவனத்துடன் இணைந்து உலகின் முதல் அங்கீகாரம் அளிக்கப்பட்ட தடுப்பூசியை உருவாக்கிய பயோடெக் தலைவர் உகுர் சாஷின் தெரிவித்துள்ளார். உலக மக்கள் தொகையில் 60% முதல் 70% பேருக்கு தடுப்பூசி போடுவது பரவலை கட்டுப்படுத்த போதுமானதாக இருக்குமா என்பதை நாம் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.