Categories
உலக செய்திகள்

கொரோனா விதிகளை மீறிய பிரதமர்… நாட்டு மக்கள் கண்டனம்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரதமர் வெளிப்படையான கூட்டம் ஒன்றில் பங்கேற்றதால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர் .

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்(68) மற்றும் அவருடைய மனைவி பஸ்ரா பிபிக்கும் கடந்த 20ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் இருவரும் தங்களை வீட்டில் தனிமை படுத்திக்கொண்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறர்கள் . இந்தச் செய்தி அந்நாட்டில் பெரும் அதிர்ச்சி மற்றும்  பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் தற்போது  கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அதிபர் தலைமையில் பனி கலா வீட்டில் ஊடக குழுவினர்  நேரடியானஆலோசனை கூட்டம் ஒன்று  நடத்தப்பட்டது .

அதில் பிரதமர் ஒரு இருக்கையிலும், ஊடக குழுவினர் வேறு வேறு இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகிறது . அது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் கொரோனா பாதித்த ஒருவர் 9 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை தனிமையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்  . ஆனால் கொரோனா பாதித்த பிரதமர் ஒரு வாரத்திற்க்குள் நேரடியான ஆலோசனை கூட்டம்  நடத்தியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து  எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கண்டனம்  தெரிவித்து வருகிறார்கள் .

மேலும் கொரோனாவிற்கு  விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய பிரதமரே அதனை மீறலாமா? என்றும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் பலரும்  கோரிக்கை விடுத்து வருகிறார்கள் . அதுமற்றும் இன்றி இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன? காணொலி  காட்சி மூலம் இதனை நடத்தியிருக்கலாமே என்று பலவிதமான கேள்விகளும் எழுந்துள்ளது .மேலும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட யூசுப் பெயிக் மிர்சா என்பவர் இந்த விமர்சனங்களை தவிர்த்துள்ளார். அவர் ,நாங்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து , தனி மனித இடைவெளியே பின்பற்றி தான் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டோம் .அதுமட்டுமல்லாமல் எதையும் குடிக்கவோ உண்ணவோ இல்லை என்று அவர் தெரிவித்து உள்ளார் .

Categories

Tech |