Categories
உலக செய்திகள்

கொரோனாவை விரட்டும் மெத்தை… அதில் உறங்கும் கால்பந்து வீரரின் குடும்பம்…!!!

பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் கொரோனாவில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள தொழில்நுட்பம் வாய்ந்த மெத்தையில் தூங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்சிலோனா கால்பந்து விளையாட்டின் பிரபல நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு நானோ தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட மெத்தையில் உறங்குகின்றனர். இந்த மெத்தையை கால்பந்து வீரர் சவுல் நிகுவேஸு தூதராக பணியாற்றும் நிறுவனம் தயாரித்து உள்ளதாகவும், அந்த நிறுவனம் அர்ஜுன்டீனா வீரர்களுக்கான பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த மெத்தையின் விலை 400 டாலர்கள். மேலும் மெத்தையில் விருக்ளின் என்ற தொழில்நுட்பம் செலுத்தப்பட்டு இருப்பதாகவும், அத்தகைய தொழில்நுட்பத்தில் புகுத்தப்பட்டுள்ள நானோ துகள்கள் மெத்தையில் படுக்கும் நபரின் உடலில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாவை நாலு மணி நேரத்தில் முழுவதுமாக நீக்கி விடுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி மாடல்களுக்கு ஏற்றவாறு கால் மசாஜ் செய்வதற்கான வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. லியோனல் மெஸ்ஸி ஆறுமுறை பாலன் டி ஓர் விருதை பெற்றுள்ளார். அவர் அர்ஜென்டினா நாட்டிற்கு கொரோனா நிவாரண நிதியாக 4,40,000 டாலர்கள் அளித்துள்ளார். சம்பள குறைப்பு நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |