Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பாதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக… வரவழைக்கப்பட்ட 600 மருந்துகள்… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை…!!

வேலூரில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த 600 ரெம்டெசிவிர் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் ஊசி  செலுத்தப்படுகின்றது.

இந்த ரெம்டெசிவிர் மருந்து கொரோனா தொற்றை குறைக்கும் தன்மை கொண்டது. இதனையடுத்து கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு இந்த ரெமிடெசிவிர் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து 600 ரெம்டெசிவிர் மருந்துகள் வேலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளது. இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வருவதாக மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |