Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதுவும் சீக்கிரம் வந்துரும்…. 4 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு…. எல்லாருக்கும் கண்டிப்பா உண்டு….!!

வேலூரில் 4 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்துபவருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.   

வேலூரில் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே தொற்றை தடுக்கும் வகையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரையிலும் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்திற்கு 7 ஆயிரம்  கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு வந்த 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இரண்டாவதாக தடுப்பூசி செலுத்துபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவாக்சின் தடுப்பூசிகள் ஓரிரு நாட்களில் வருவதாக மருத்துவ ஊழியர் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து அதிகமாக தடுப்பூசி டோஸ் வந்தபின் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |