கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனால் மாவட்டத்திற்கு வந்த 40 ஆயிரம் கோவிசீல்டு தடுப்பூசியை செலுத்துவதற்காக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களுக்கு சென்று ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
ஆனால் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 10 ஆயிரம் பேர் இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்துவதற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு வந்த 8 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் இரண்டாவது முறை செலுத்திக் கொள்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே முதல் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் கோவிசீல்டு தடுப்பூசியை செலுத்தலாம் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.