Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவை ஒழித்துக்கட்ட…. ஆடுகளை வெட்டி சிறப்பு பூஜை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

வாணியம்பாடி அருகில் கொரோனாவை ஒழித்துக்கட்ட  கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆடுகளை வெட்டி சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் மாவட்ட நிர்வாகம் அதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கிராமத்து மக்கள் தங்கள் பாணியில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டியப்பனூர் ஊராட்சியில் உள்ள துறையேறி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அங்கு இருக்கக்கூடிய தேசத்து மாரியம்மன், முத்துமாரியம்மன், காளி மாரியம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கு மூன்று ஆடுகளை வாங்கி வந்துள்ளனர்.

இதனையடுத்து கொரோனா பரவலை தடுக்கவும், இந்த ஊரில் இருந்து கொரோனாவை ஒழித்து கட்டவும் பொது மக்கள் ஒன்று சேர்ந்து பொது இடத்தில் மூன்று ஆடுகளை பலி கொடுத்து சிறப்பு பூஜைகளை நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாசில்தார் மோகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |