தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6,129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதனால் தற்போது வரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,25,456 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்ட 53,282 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தின் கொரோனா பரிசோதனைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை கூறுகையில், ” தமிழகத்தில் நேற்று மட்டும் 67,980 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தற்போது வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,31,604 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயத்தில் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 70,023 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதனால் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து தற்போது வரை எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 42,76,640 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதன் மூலம், கொரோனா பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து, தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனாவை விரைவில் விரட்ட முடியும்” என்று மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.