Categories
உலக செய்திகள்

இது இல்லாம வெளிய போகாதீங்க…. முககவசம் இனி வேண்டாம்…. தகவல் தெரிவித்த பிரபல நாடு…!!

பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் கொரோனா வைரஸின் நான்காவது அலையை முன்னெச்சரிக்கையுடன் கையாள்வதற்காக ஹெல்த் பாஸ்போர்ட் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் பல்வேறு விதமாக கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸில் பரவி வரும் டெல்டா வைரஸ் பரவலின் காரணமாக அந்நாட்டு அரசு சில விதிமுறைகளை விதித்துள்ளது. இதனை அடுத்து நான்காவது அலையை முன்னெச்சரிக்கையுடன் காத்துக் கொள்வதற்காக பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு இன்று முதல் ஹெல்த் பாஸ்போர்ட் அவசியம் என்று கூறியுள்ளனர். இந்த ஹெல்த் பாஸ் தொற்றிலிருந்து மீண்டவர், கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர் அல்லது 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனையில் அவர் எந்தவித நோய் தொற்றுக்கு ஆளாகவில்லை என்பதற்கான ஆதாரமாக இது வழங்கப்படுகிறது.

மேலும் 50க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் இடங்களான நீச்சல்குளம், பூங்கா, நூலகம், திரையரங்கம், அருங்காட்சியகம், கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கும் போன்ற இடங்களில் இது மிகவும் அவசியமாகும். இந்த பாஸ்போர்ட் ஆனது வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இன்னும் விரிவாக்கம் செய்யப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இந்த பொது இடங்களில் பணியாற்றுபவர்கள் 30ஆம் தேதிக்குள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதிலும் குறிப்பாக ஹெல்த் பாஸ் தேவைப்படும் இடங்களில் கட்டாயமின்றி முககவசம் அணிய தேவையில்லை எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |