கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அலட்சியமாக இருந்தவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் இருந்து சேலம் வந்து கொரோனோவை பரப்பியதாக கைது செய்யப்பட்ட 16 பேரையும் 25ஆம் தேதி வரை காவலில் வைக்க சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவர்கள் 16 பேரும், சேலம் நீதிமன்ற உத்தரவுபடி காலை 6.30 மணி அளவில் ஆத்தூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு அங்கிருந்து அனைவரும் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அலட்சியமாக இருந்தது, சமூகத்தில் நோயை பரப்பியது என 7 பேர்களின் கீழ் 16 பேர்களின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து 11 பேர் மதபோதனைக்காக கடந்த மாதம் 12ஆம் தேதி சேலம் வந்திருந்தனர். தொடர்ந்து 10 நாட்கள் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் அவர்கள் மத போதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தான் நாடு முழுவதும் கொரோனா பரவியது.
அவர்கள் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சேலத்தில் அவர்களுக்கு உதவிய 4 பேர், சென்னை வழிகாட்டி ஒருவர் என 16 பேருக்கும் கோரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் பட்டனர். இவர்களில் தற்போது 6 பேர் குணமடைந்துள்ளனர். இவர்கள் மூலமே சேலத்தில் கொரோனா பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது.