உலகை அச்சுறுத்திய ஜாஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களை விட கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய ஜாஸ் வைரஸ் 724 பேரை பலிகொண்டது.
தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய குவைத் மாகாணம் மட்டும் இதுவரை 780 பேர் உயிரிழந்ததாக சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றவர்கள் சனிக்கிழமை மட்டும் 81 பேர் உயிரிழந்தனர்.
நோய் எதிர்ப்பு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு அதிகரித்து இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சப்படுகின்றனர்.
சீனாவில் நேற்று மட்டும் புதியதாக 2656 பேருக்கு தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 37 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜப்பானில் 90 பேர், சிங்கப்பூரில் 40 பேர், தென்கொரியாவில் 25, ஆஸ்திரேலியாவில் 15 பேர், கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.