கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்தி மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை சிதைக்க சீனா திட்டமிட்டு இருக்கிறது என்று பிரிட்டன் கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றிய கடந்த டிசம்பர் மாதம் காலகட்டத்தில் சீனாவின் யூகான் நகரத்தில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று பிரிட்டன் கூறியுள்ளது. இது தொடர்பான பல கடினமான கேள்விகளுக்கு சீனா பதிலளிக்க வேண்டியுள்ளது என்பது பிரிட்டனின் நிலைப்பாடாகும்.
தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் யூகான் நகர ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற கருத்து ஒரு தரப்பினர் இடையே நிலவி வந்தாலும், கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்தி மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை சிதைக்க சீனா திட்டமிட்டு இருக்கிறது என்பது புகாராகும். இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே விசாரணையை தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.