கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 3 பேர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமோனோகர்லால் மருத்துவமனையில் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.3 பேரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள வைரஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேற்கு வங்கம் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த சீன பெண்ணுக்கு வைரஸ் தொற்றுக்கான அறிகுறி தென்பட்டது. இதனை அடுத்து கொல்கத்தாமற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள பட்டிருக்கிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் 10 படுக்கைகள் கொண்ட தனிதொற்று சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்தநிலையில் ஜெர்மனி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சீன குடிமக்களுக்கு உடனடி விசா வழங்கும் நடைமுறைகளை இலங்கை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. சீனாவிற்கான பயணத்தை தவிர்க்குமாறு தமது நாட்டு குடிமக்களை அமெரிக்காவும் அறிவுறுத்தி உள்ளது.