144 தடை உத்தரவால் புனித வெள்ளியான இன்று தேவாலயங்களில் மக்கள் யாருமின்றி பிரார்த்தனை நடைபெறாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னை சின்னமலை பங்குச்சந்தை லாரன்ஸ் ராஜ் இணையதளம் வாயிலாக மக்களுக்கு போதனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்று மக்களை விட்டு நீங்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம் என தெரிவித்தார்.
உலகமெங்கும் இன்றைக்கு புனித வெள்ளியை கொண்டாடி கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த புனிதமான நாளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இயேசு கல்வாரி சிலுவையில் அறையப்பட்ட அந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வரலாற்றில் முதல்முறையாக மக்கள் இல்லாமல் ஆலயங்களில் வழிபாடு நடப்பது இதுதான் முதல் முறை. கோடிக்கணக்கான மக்கள் உலகத்தில் எல்லா ஆலயங்களிலும் பாடுபட்ட இயேசுவின் சிலுவைக்கு முன்னால் மண்டியிட்டு விழுந்து கண்ணீர் விட்டு அழுது பாவம் செய்ததற்காக பரிகாரம் தேடுகின்ற இந்த நாளில் இந்த வருடம் வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.
எப்படி கல்வாரி சிலுவையிலே இரத்தத்தை சிந்தி பாவங்களை எல்லாம் கழுவி தூய்மையாக்கினாரோ அதே ஆண்டவன் இயேசு இன்றைக்கு தன்னுடைய இரத்ததால் இந்த கொரோனா நோயிலிருந்து நம்மையும் நம் உலகத்தையும் காப்பாற்ற வேண்டும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி மிக சிறப்பாக நாம் ஜெபிக்க வேண்டியிருக்கிறது. கடவுளால் முடியாதது எதுவும் இல்லை அவர் மனம் வைத்தால் எல்லாம் நடைபெறும். எனவும் கூறினார்.